உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஐயப்பன் பூஜா சங்கத்தில் மஹோத்சவம் இன்று துவக்கம்

ஐயப்பன் பூஜா சங்கத்தில் மஹோத்சவம் இன்று துவக்கம்

கோவை:ராம்நகர், ஐயப்பன் பூஜா சங்கத்தில், 65வது ஆண்டு, பூஜா மஹோத்சவ விழா இன்று துவங்கி தொடர்ந்து நான்கு நாட்களுக்கு நடக்கிறது.முதல் நாளான இன்று, காலை, 5:00 மணிக்கு மஹா கணபதி ஹோமம், ஸ்ரீ தர்மசாஸ்தா ஆவாஹனம், சூர்யநமஸ்காரம், அபிஷேகம் நடக்கிறது. காலை, 8:00 மணிக்கு நவக்கிரக ஹோமம், ஸ்ரீ சுதர்சன ஹோமம், சத்ரு சம்ஹார திரிசதி ஹோமம் நடக்கிறது. இரவு, 7:00 மணிக்கு, ஸ்ரீ நுாரணி ஸ்ரீனிவாசன் குழுவினரின் நாமசங்கீர்த்தன இசை நிகழ்ச்சி நடக்கிறது. நாளை காலை, 5:30 மணிக்கு, மஹா ருத்ரயக்ஞம், இரவு, 8:00 மணி முதல் புத்தாண்டு சிறப்பு பஜன், கோவை ஜெயராமன் பாகவதர் குழுவினரின் திவ்ய நாம பஜனை நடைபெறுகிறது. ஜன.,1ல், காலை, 7:30 மணிக்கு, நவசண்டி மகாயக்ஞம் நடக்கிறது.

ஜன.,2 காலை, 7:00 மணிக்கு, மகா புருஷஷீக்த, ஸ்ரீ ஷீக்த ஹோமங்கள் மற்றும் ஹரிஹர புத்ர, மூல மந்திர ஹோமம் நடக்கிறது. ஜன.,3ல் ருத்ராபிஷேகம், சண்முக அர்ச்சனை நடக்கிறது. காலை, 9:00 மணிக்கு, பஞ்சவாத்தியம் முழங்க, திருவாபரண பெட்டியுடன், மூன்று யானைகளுடன், சுவாமி திருமஞ்சன உலா வந்து அருள்பாலிக்கிறார். மாலை, 6:05 மணிக்கு, புஷ்ப பல்லக்கில், மூன்று யானைகளுடன், பஞ்சவாத்தியம் முழங்க, ஐயப்பன் திருவீதி உலா வருகிறார். இரவு, 7:00 மணிக்கு, ஸ்ரீ சபரீஷ பஜன் மண்டலி சார்பில், நாமசங்கீர்த்தன இசை நிகழ்ச்சி நடக்கிறது. இதில் அனைவரும் பங்கேற்கும்படி, ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்க தலைவர் கணபதி மற்றும் செயலாளர் விஸ்வநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !