உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரம் கோயில் கும்பாபிஷேகம்: பஞ்சவர்ணத்துடன் ஜொலிக்கும் ராஜகோபுரம்!

ராமேஸ்வரம் கோயில் கும்பாபிஷேகம்: பஞ்சவர்ணத்துடன் ஜொலிக்கும் ராஜகோபுரம்!

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி கிழக்கு ராஜகோபுர விமானங்கள் பஞ்சவர்ணம் பூசப்பட்டு புதுப்பொலிவுடன் ஜொலிக்கிறது. 12 ஜோதிர்லிங்க ஸ்தலங்களில் ஒன்றான ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஜன. 20ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. இதற்காக ரூ.7 கோடியே 90 லட்சம் செலவில் திருப்பணிகள் நடக்கிறது. ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன், காசிவிஸ்வநாதர், விசாலாட்சி அம்மன் உள்ளிட்ட 22 சன்னதிகளில் உள்ள விமானங்கள் மராமத்து செய்து, வர்ணம் பூசி புதுபொலிவுடன் ஜொலிக்கிறது. 1404ம் ஆண்டில் விஜயநாயக்கர் ஆட்சியின்போது கோயிலில் சுவாமி, அம்மன், காசிவிஸ்வநாதர் சன்னதி, விமானம் மற்றும் முதல் பிரகாரம் கட்டுமான பணி துவங்கப்பட்டது. 16ம் நூற்றாண்டில் திருமலை சேதுபதி மன்னர் திருப்பணியை முடித்து வைத்தார். 1897-1904ம் ஆண்டில், காரைக்குடி ஏ.எல்.ஆர்.ஆர். குடும்பத்தினர் கோயிலில் 126 அடி உயரம், 9 நிலைகளுடன் பிரமாண்ட கிழக்கு ராஜகோபுரம் அமைத்தனர். இதுதான் கோயிலின் மிக உயரமான கோபுரம். இவை பஞ்சவர்ணம் பூசப்பட்டு கும்பாபிஷேகத்திற்கு தயாராக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !