காரைக்கால் நித்யகல்யாண பெருமாள் கோவிலில் ராப்பத்து உற்சவம்
ADDED :3584 days ago
காரைக்கால்: காரைக்கால் நித்யகல்யாண பெருமாள் கோவில் ராப்பத்து உற்சவத்தில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி காட்சியளித்தார். காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் கடந்த 11ம் தேதி மார்கழி மாத உற்சவம் துவங்கியது. பகல்பத்து உற்வசத்தில் தினம் நித்ய கல்யாண பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், மாலை பிரபந்த சேவையும், மாடவீதி சுவாமி வீதியுலா நடந்தது. ராப்பத்து உற்சவத்தில் நித்ய கல்யாண பெருமாள் முத்தங்கியில் திருக்கண்ணபுரத்தின் பெருமையை பறைசாற்றி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம், தனி அதிகாரி ஆசைத் தம்பி செய்திருந்தனர்.