மாகாளியம்மன் கோவில் பொங்கல் விழா!
ADDED :3584 days ago
அனுப்பர்பாளையம் : அம்மாபாளையத்தில் உள்ள ஸ்ரீவிநாயகர், காமாட்சியம்மன், மாகாளியம்மன் கோவில் பொங்கல் விழா, 22ல் பூச்சாட்டுதலுடன் துவங்கியது. 23 முதல், 27 வரை, தினமும் இரவு அலங்கார பூஜை நடந்தது. 28 மாலை, விநாயகருக்கு பொங்கல் வைத்தல், இரவு படைக்கலம் அம்மை அழைத்தல், 29 இரவு கும்பம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை, 7:00 மணிக்கு மாவிளக்கு மற்றும் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது; ஏராளமான பெண்கள் பங்கேற்று, பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்தனர். மாலை, தேர் இழுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இன்று மதியம், 12:00க்கு மஞ்சள் நீராட்டு விழா, இரவு, 8:00க்கு ஆன்மிக பட்டிமன்ற நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை ஊர் பொது மக்கள் மற்றும் விழா குழுவினர் செய்துள்ளனர்.