உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவையில் ஐயப்பன் பூஜா மஹோத்ஸவ விழா!

கோவையில் ஐயப்பன் பூஜா மஹோத்ஸவ விழா!

கோவை: கோவை ராம்நகர் ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கத்தில், 65வது பூஜா மஹோத்ஸவ விழா நேற்று துவங்கியது. தொடர்ந்து நான்கு நாட்களுக்கு, விழா நடக்கிறது. ஐயப்ப பூஜா சங்கத்திலுள்ள, ஸ்ரீ ஐயப்பன் சன்னிதியில், நேற்று காலை, 5:00 மணிக்கு, கணபதி ஹோமம், சுவாமிக்கு அபிஷேகம், வேதபாராயணம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, பூர்ணாஹுதி, வசோர்த்தாரை, புஷ்பாஞ்சலி, ஐயப்பன் பவனி, அன்னதானம் நடந்தது. பகல் 12:00 மணிக்கு உபநிஷத் பாராயணம், பூர்ணாஹுதி, மஹாதீபாராதனை நடந்தது. இரவு 7:00 மணிக்கு, நுாரணி ஸ்ரீனிவாசன் குழுவினரின் நாமசங்கீர்த்தன இசை நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று காலை, 5:30 மணிக்கு, மஹா ருத்ரயக்ஞம், உபநிஷத் பாராயணம் தம்பதி பூஜை; பகல் 12:00 மணிக்கு பக்த போஜனம்; இரவு, 8:00 மணிக்கு, கோவை ஜெயராமன் குழுவினரின் திவ்யநாம பஜனை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !