உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமநாதபுரத்தில் நாளை சகஸ்ர நாம லட்சார்ச்சனை!

ராமநாதபுரத்தில் நாளை சகஸ்ர நாம லட்சார்ச்சனை!

ராமநாதபுரம்: ராமநாதபுரம் வடக்கு ரத வீதி ருக்மணி பாண்டுரங்க கிருஷ்ணர் கோயிலில் விஷ்ணு சகஸ்ரநாம லட்சார்ச்சனை நாளை(ஜன., 1) துவங்குகிறது. உலக நன்மை, ஆரோக்கியம் வேண்டி நாளை(ஜன., 1) காலை 8 மணிக்கு சங்கல்பம், லட்சார்ச்சனை துவங்குகிறது. நண்பகல் 11.30 மணிக்கு தீபாராதனை, சாற்றுமுறை, மாலை 5 மணிக்கு லட்சார்ச்சனை, இரவு 8.30 மணிக்கு தீபாராதனை, சாற்றுமுறை மற்றும் பிரசாதம் வழங்கப்படுகிறது. ஜன., 2 காலை 5 மணிக்கு லட்சார்ச்சனை, நண்பகல் 11.30 மணிக்கு தீபாராதனை, சாற்றுமுறை, மாலை 5 மணிக்கு லட்சார்ச்சனை, இரவு 8.30 மணிக்கு தீபாராதனை, பிரசாதம் வழங்கப்படுகிறது. ஜன., 3 காலை 8 மணிக்கு ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாம ஹோமம், திருமஞ்சனம், லட்சார்ச்சனை, அர்ச்சனை, நண்பகல் 11.30 மணிக்கு தீபாராதனை, சாற்றுமுறை, சம்பாவணை, பிரசாதம் வழங்கப்படுகிறது. மாலை 6.30 மணிக்கு ஸ்ரீஹனுமானுக்கு வடமாலை சாத்தப்படுகிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !