ஆண்டாள் கோயிலில் கும்பாபிஷேகம் இரண்டாம் கட்ட ஆலோசனை கூட்டம்
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தங்க விமான கோபுர கும்பாபிஷேகம் ஜனவரி 20 காலை 9 மணிக்கு நடக்கிறது. யாகசாலை பூஜைகள் 16ந்தேதி முதல் 19ந்தேதி வரை நடக்கிறது. இதற்கான 2ம் கட்ட ஆலோசனை கூட்டம் நேற்று மாலை செருக்கூர் மண்டபத்தில் கலெக்டர் ராஜாராமன் தலைமையில் நடந்தது .டி.ஆர்.ஓ.,முத்துகுமரன், ஒன்றிய தலைவர் காளிமுத்து, தக்கார் ரவிசந்திரன், அறநிலையத்துறை உதவி ஆணையர் ஹரிஹரன் மற்றும் அனைத்து அரசுத்துறை அதிகாரிகளும் பங்கேற்றனர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், போக்குவரத்து, சுகாதாரம்,மருத்துவம், போக்குவரத்து உட்பட பல வசதிகள் செய்து கொடுப்பது குறித்து விவாதிக்கபட்டது. ஏற்பாடுகளை செயல்அலுவலர் ராமராஜா தலைமையில் கோயில் அலுவலர்கள் செய்திருந்தனர். பின்னர் கோயிலின் பல பகுதிகளை அதிகாரிகள் பார்வையிட்டு, செய்யவேண்டிய வேலைகள் குறித்து ஆலோசித்தனர்.