உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தர்மசாஸ்தா மணி மண்டபத்தில் ஐயப்பன் சிறப்பு மண்டல பூஜை

தர்மசாஸ்தா மணி மண்டபத்தில் ஐயப்பன் சிறப்பு மண்டல பூஜை

தேவகோட்டை: தேவகோட்டை தர்மசாஸ்தா மணி மண்டபத்தில் ஐயப்பன் சிறப்பு மண்டல பூஜை நடந்தது. லட்சார்ச்சனை, பால்குடம்,விளக்கு பூஜை, மகேஸ்வர பூஜை, மஞ்சள் மாதா பவனி நடந்தது. சிறப்பு அபிஷேகம் பூஜைகளை தொடர்ந்து ஐயப்பசாமி நகர்வலம் நடந்தது. சிறப்பு மண்டல பூஜைக்கு பின் நடை சாற்றப்பட்டது. சபரி சாஸ்தா குழு சார்பில் கருதாவூரணி குரு பூஜை மடத்தில் ஐயப்பனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று ஐயப்பன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு விசேஷ பூஜை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !