உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பீடாதிபதி சச்சிதானந்த சரஸ்வதி மகா சுவாமிஜியிடம் ஆசிர்வாதம்

பீடாதிபதி சச்சிதானந்த சரஸ்வதி மகா சுவாமிஜியிடம் ஆசிர்வாதம்

சென்னை: கர்நாடக மாநிலம், ஹரிஹரபுரா ஸ்ரீ ஆதி சங்கராச்சாரிய சாரதா லட்சுமி நரசிம்ம பீடத்தின் பீடாதிபதி ஸ்வயம்பிரகாச சச்சிதானந்த சரஸ்வதி மகா சுவாமிஜியிடம், பக்தர்கள் ஆசி பெற்றனர். வரும் ஜன., 10ம் தேதிவரை, சென்னையில் நடை பெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று, பீடாதிபதி ஸ்வயம்பிரகாச சச்சிதானந்த சரஸ்வதி மகா சுவாமிஜி, பக்தர்களுக்கு ஆசி வழங்க உள்ளார். நேற்று, அடையாறில் உள்ளஸ்ரீ அனந்த பத்மநாப சுவாமி மடத்தில் சுவாமிஜி, தீர்த்த பிரசாதம் வழங்கினார். அதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, ஆசிர்வாதம் பெற்றனர். பக்தர்கள் கூறியதாவது:சுவாமிஜி கரங்களில் இருந்து வாங்கும் தீர்த்தமானது மிகவும் விசேஷமானது; சிவன், அம்மனுக்கு அபிஷேகம் செய்த புனித நீர் கிடைப்பது அரிதானது.சென்னையில், 10 நாட்களுக்கு மடத்தில் தங்கிய சுவாமிஜியை நாடி வரும் பக்தர்களுக்கு, காலை, 10:00 மணி முதல், ஆசிர்வாதம் வழங்குவார்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !