ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் தகவல் மையம்
ADDED :3783 days ago
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஜன. 2ஆண்டாள் கோயிலுக்கு நாளுக்கு நாள் பக்தர்கள் வருகை அதிகரித்து
வருவதாலும், தங்க விமான கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் நடக்க இருப்பதாலும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து தகவல்களும் கிடைப்பதற்காக தகவல் மையம் திறக்கபட்டுள்ளது. இதை தக்கார் ரவிசந்திரன் துவக்கி வைத்தார். செயல்அலுவலர் ராமராஜா, அனந்தராமகிருஷ்ணபட்டர், நாச்சியார் டிரஸ்ட் ரெங்கசாமி, ஸ்தானிகம் ரமேஷ் மற்றும் திருக்கோயில் அலுவலர்கள் பங்கேற்றனர். அனைத்து நாட்களிலும் தகவல் மையம் திறந்திருக்கும், திருக்கோயில் பற்றிய முழு விபரங்கள் பக்தர்களுக்கு தெரிவிக்கப்படும்.