உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஓசூர் கடலைக்காய் திருவிழா

ஓசூர் கடலைக்காய் திருவிழா

ஓசூர்: ஓசூர் ஆஞ்சநேயர் கோவிலில் கடலைக்காய் திருவிழா, நேற்று நடந்தது. ஓசூர் ராஜகணபதி நகரில், வரசித்தி ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. அங்கு, நேற்று காலை, கடலைக்காய் (நிலக்கடலை) திருவிழா நடந்தது. அதிகாலையில் கணபதி ஹோமம் நடத்தப்பட்டு, ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதில், கோபுரம் மீது கடலைக்காயை தூக்கி
வீசி, தங்களின் நேர்த்திக்கடனை பக்தர்கள் செலுத்தினர். பின், பக்தர்களுக்கு அன்னதானம்
வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !