காரைக்குடி அருகே கால்வாயில் சுவாமி சிலைகள் கண்டெடுப்பு
சிவகங்கை: காரைக்குடி அருகே கால்வாயில் முருகன்,அம்பாள் உட்பட 6 சிலை
கண்டெடுக்கப்பட்டுள்ளன. கண்டனூர் பெருமாள் கோவில் பின் பகுதியில் மாத்தூர் ரோடு
சீரமைப்பு பணி நடக்கிறது. இயந்திரம் மூலம் அருகில் மண்ணெடுத்து சீரமைக்கப்படுகிறது. இதே ரோட்டில் ஒரு பாலத்தின் முகப்பு மேடாக இருந்தது. தண்ணீர் போக வசதியாக முகப்பு பகுதியை இயந்திரம் மூலம் ஆழப்படுத்தி சீரமைத்தனர். அப்போது, மண்ணுக்குள் புதையுண்டு கிடந்த சிலைகள் தென்பட்டன. வருவாய்த்துறை ஆர்.ஐ., மாரியப்பன், வி.ஏ.ஓ., ஆய்வு செய்தனர். அம்பாள் சிலை3, விநாயகர், முருகன், அய்யனார் சுவாமி சிலைகள் தலா ஒன்று என, தெரியவந்தது. "சிமென்ட் கலவையால் தயாரிக்கப்பட்ட சிலைகளாக இருப் பதால், அவற்றை வருவாய்துறையினர் கைப்பற்றி விசாரிக்கின்ற னர். ஆர்.ஐ., மாரியப்பன் கூறுகையில், "கண்டனூர் பகுதியில் ஒருவர் சுவாமி சிலைகள் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளார். சிமென்ட் கலவை சிலையாக இருப்பதால், வெள்ளி சிலைகள் தயாரிக்க, இந்த சிமென்ட் சிலைகளை பயன்படுத்தி இருக்கலாம். பயன்படாத சூழலில் அவரை கால்வாயில் வீசியிருக்கலாம் என, தெரிகிறது, என்றார்.