உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பக்தர்களின் சேவகர்களாக வேண்டும் போலீஸ் டூட்டி நேரத்தில் மொபைல் பார்க்க கூடாது

பக்தர்களின் சேவகர்களாக வேண்டும் போலீஸ் டூட்டி நேரத்தில் மொபைல் பார்க்க கூடாது

சபரிமலை: பக்தர்களின் சேவர்களாக போலீசார் செயல்பட வேண்டும், வேலை நேரத்தில்
மொபைல் போன் பயன்படுத்தக்கூடாது என்று மகரவிளக்கு கால போலீசாருக்கு அறிவுரை
வழங்கப்பட்டுள்ளது.

மகரவிளக்கு கால பாதுகாப்புக்காக வந்துள்ள போலீசார் மத்தியில் சன்னிதானம் போலீஸ் தனி அதிகாரி டாக்டர் அருள் ஆர்.பி. கிருஷ்ணா பேசியதாவது: சபரிமலையில் வேலை பார்க்கும் போலீசாருக்கு ஒரு டூட்டியில் அதிக பட்சமாக நான்கு மணி நேரம் தான் பணி உள்ளது. இந்த நேரத்தில் சில மூதாட்டிகள் வெற்றிலைக்கு சுண்ணாம்பு தேய்ப்பது போல் "டச்போனை தேய்த்துக் கொண்டிருப்பது சரியல்ல. பணி நேரம் முடிந்த பின்னர் இதை செய்து கொள்ளலாம். ஒரு டூட்டி பாயின்டில் நிற்கும் போலீஸ் குறிப்பிட்ட நேரம் வரை நின்று விட்டுதான் செல்ல வேண்டும். அவர் ஐந்து நிமிடம் முன்னதாக சென்றால், அடுத்து வருபவர் பத்து நிமிடம் தாமதமானால் 15 நமிடம் அந்த பாயின்டில் ஆள் இல்லாத நிலை ஏற்படும்.
பக்தர்களுக்கு நல்ல தரிசனம் கிடைக்க போலீசார் <உதவியாக இருக்க வேண்டும். 10 முதல் 12
மணி நேரம் வரை கியூவில் காத்து நின்று தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் ஏதாவது சூழ்நிலையில் கோபப்படவேண்டிய நிலை வந்தால் போலீசார் அதை பொறுத்துக் கொள்ள வேண்டும். நடை திறந்து அடைக்கும் நேரம், சிகிட்சை வசதிகள் போன்ற விபரங்களை போலீசார் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு போலீஸ்காரர் செய்யும் தவறு ஒட்டு மொத்த போலீசையும் பாதிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !