உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரமலான் சிந்தனைகள்-8 : தொழுகையின் மாண்பு

ரமலான் சிந்தனைகள்-8 : தொழுகையின் மாண்பு

ரமலான் காலத்தில் தொழுகையை மேலும் மேலும் அதிகப்படுத்துங்கள். தொழுகையின் மாண்பு குறித்து நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறும் கருத்துக்கள் அளப்பரியன. நீங்கள் அல்லாஹ்வுக்கு அதிகமாக ஸஜ்தா செய்யுங்கள் (தொழுங்கள்), நிச்சயமாக நீங்கள் செய்யும் ஒவ்வொரு ஸஜதாவைக் கொண்டும் உங்களுக்கு ஒரு பதவியை அல்லாஹ் உயர்த்துகிறான். உங்களை விட்டும் ஒரு பாவத்தை அழித்துவிடுகிறான்.
மனிதன் தான் தொழுத பிறகு, அவனுக்காக தொழுகையின் பத்தில் ஒரு பங்கு பதிவு செய்யப்படுகிறது. சிலருக்கு ஒன்பதில் ஒரு பங்கு, சிலருக்கு எட்டில் ஒரு பங்கு, சிலருக்கு ஏழில் ஒரு பங்கு, சிலருக்கு ஆறில் ஒரு பங்கு, சிலருக்கு ஐந்தில் ஒரு பங்கு, சிலருக்கு நான்கில் ஒரு பங்கு, சிலருக்கு மூன்றில் ஒரு பங்கு.. இவ்வாறு பதிவு செய்யப்படுகிறது. நாம் தொழும் தொழுகைக்கு பல ஆயிரத்தில் ஒரு பங்கென்ன... பல லட்சத்தில் ஒரு பங்கும் பதிவு செய்யப்படுமேயானால்... அதுவும் அல்லாஹ்வின் கிருபையாகும். சில தொழுகைகள் பழைய துணியைப் போன்று சுருட்டி தொழுதவருடைய முகத்தில் வீசப்படும். தொழுகையாளிகள் வணக்க வழிபாடுகளில் தமது திறமை முழுவதையும் காட்டுவார்கள். இந்த விஷயத்தில் ஷைத்தான் தோல்வியடைந்து விட்டான். இருப்பினும் முஸ்லிம்களுக்கிடையே பகைமைத் தீயை மூட்டுவதில் நம்பிக்கை இழக்கவில்லை.
கியாம நாளில் முதலாவதாக கேட்கப்படும் கேள்வி, தொழுகையை பற்றியதாகும்.
அல்லாஹ் வானவர்களை நோக்கி,"" என்னுடைய அடியானின் தொழுகை குறைவாக உள்ளதா என்பதைக் கவனியுங்கள், என்று
கட்டளையிடுவான். அது முழுமையாக இருந்தால் அது முழுமையென்று பதியப்படும். குறைவாக இருந்தால் குறைவென்று பதியப்படும். ""இம்மனிதனிடம் ஏதேனும் நபிலான தொழுகைகள் உள்ளதா? என்று வானவர்களிடம் இறைவன் கேட்பான். நபிலான தொழுகை இருக்குமானால், அதனைக் கொண்டு பர்ளுகளை நிறைவு செய்யப்படும். இவ்வாறே நபிலான தொழுகைகள், இவ்வாறே மற்ற செயல்களை குறித்து கேள்விகள் கேட்கப்படும்.

இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.47 மணி
நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.31 மணி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !