பாலசாஸ்தா ஐயப்பன் கோவிலில் திருவிளக்கு வழிபாடு
ADDED :3721 days ago
அவிநாசி: சேவூர் ஸ்ரீபாலசாஸ்தா ஐயப்பன் கோவிலில், 24ம் ஆண்டு திருவிளக்கு வழிபாடு, அன்னதான பெருவிழா நடந்தது. இதையொட்டி, கணபதி, ருத்ரமஹன்யாச மற்றும் சாஸ்தா ஹோமம் நடைபெற்றது. அதன்பின், ஐயப்பனுக்கு அஷ்டாபிஷேகம் செய்யப்பட்டு, மகா அலங்கார தீபாராதனை, கூட்டு வழிபாடு ஆகியன நடந்தது. அதன்பின், திருவிளக்கு வழிபாடு நடைபெற்றது; 200க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று, பூஜை செய்தனர். சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய ஐயப்ப சுவாமி, செண்டை மேளம் முழங்க, சேவூர் முழுவதும் வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காலை முதல் இரவு வரை, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, சேவூர் ஸ்ரீதர்மசாஸ்தா டிரஸ்ட் நிர்வாகிகள், பக்தர்கள் செய்திருந்தனர்.