உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்தி விநாயகர் கோவில் மார்கழி உற்சவ விழா

சித்தி விநாயகர் கோவில் மார்கழி உற்சவ விழா

சூலுார் : பி.என்.பி., காலனி சித்தி விநாயகர் கோவில் மார்கழி உற்சவ விழாவை ஒட்டி, பஞ்ச மூர்த்திகள் திருவீதி உலா நடந்தது. சூலுார் அடுத்த பி.என்.பி., காலனி சித்தி விநாயகர் கோவிலில்மார்கழி உற்சவத்தை ஒட்டி, நேற்று முன்தினம் காலை, 10:30 மணிக்கு மூலமந்திர ஜபஹோமம் நடந்தது. தொடர்ந்து, உற்சவ மூர்த்திகளுக்கு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. தீபாராதனை முடிந்து, பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா நடந்தது. அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் முக்கிய வீதிகள் வழியாக சென்று, பஞ்சமூர்த்திகள் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். வாணவேடிக்கைகள் நடந்தன. விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !