உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கண்டவராயன்பட்டியில் வைகாசி பூச்சொரிதல் விழா திருக்கல்யாணம்

கண்டவராயன்பட்டியில் வைகாசி பூச்சொரிதல் விழா திருக்கல்யாணம்

திருப்புத்தூர்; திருப்புத்தூர் ஒன்றியம் கண்டவராயன்பட்டி ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் முதலாமாண்டு வைகாசி பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு திருக்கல்யாணம் நடந்தது. நகரச் சிவன் கோயிலான இங்கு வைகாசி பூத்திருவிழா நேற்று அதிகாலை கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து மணக் கோலத்தில் சுந்தரேஸ்வரர், மீனாட்சி எழுந்தருளினர். தொடர்ந்து சிவாச்சார்யர்களால் சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் மாலை மாற்றுதல், காப்புக் கட்டுதல், பட்டு உடுத்தும் சடங்குகள் நிறைவேறின. பின்னர் திருப்பூட்டப்பட்டு திருக்கல்யாண வைபவம் நடந்தது.

அதிகாலை முதல் பக்தர்கள் பூத்தட்டு எடுத்து சென்று அதிகாலையிலேயே அம்பாளுக்கு பூச்சொரிதல் நடைபெறும். பின்னர் காலை 9:05 மணிக்கு மாப்பிள்ளை பிள்ளையார் கோயிலிலிருந்து பக்தர்கள் பால் குடம் எடுக்கின்றனர். தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். இரவு 7:00 மணிக்கு பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா நடைபெறும்.  ஏற்பாட்டினை கண்டவராயன்பட்டி நகரத்தார், விழா குழுவினர், நடப்பு காரியக்காரர்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !