பழநி வன்னி விநாயகர் கோயிலில் குரு பெயர்ச்சி யாகம் துவக்கம்
ADDED :1 days ago
பழநி: தமிழ்நாடு பிராமண ஸமாஜம் சார்பில் பழநி வன்னி விநாயகர் கோயிலில் குரு பெயர்ச்சி முன்னிட்டு மே 23-26 வரை நடக்கிறது.
தமிழ்நாடு பிராமண ஸமாஜம் சார்பில் பழநி, கோவை ரோடு, பனை அடி பகுதியில் உள்ள வன்னி விநாயகர் கோயிலில் குரு பெயர்ச்சியை முன்னிட்டு மே.23, முதல் மே.26, வரை சிறப்பு யாக பூஜைகள் நடைபெறுகிறது. இதில் தமிழ்நாடு பிராமண சமாஜ தலைவர் ஹரிஹர முத்து அய்யர் தலைமையில், விஷ்வ ஹிந்து பரிஷத் தென் மாநில தலைவர் ராமகிருஷ்ணன் முன்னிலையில் மே.23, கணபதி பூஜை உடன் துவங்கியது. நேற்று மே.24, சுயம்வரகலா பார்வதி யாகம், கந்தர்வராஜ யாகம் நடந்தது. இன்று ஜீவ சபர்ய ஹோமம், குருபெயர்ச்சி மகா சங்கல்யம், நாளை மே.26, குரு பெயர்ச்சி மகா யாகம், தீபாராதனை நடைபெற உள்ளது. நிகழ்ச்சியில் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.