உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குருவித்துறையில் குருபெயர்ச்சி விழா ; லட்சார்ச்சனை துவங்கியது

குருவித்துறையில் குருபெயர்ச்சி விழா ; லட்சார்ச்சனை துவங்கியது

சோழவந்தான்: குருவித்துறை சித்திரரத வல்லப பெருமாள் கோயிலில் இன்று மே 24 ல் குருப்பெயர்ச்சி விழா  துவங்கியது. 

நவகிரஹங்களில் நன்மைகளை வாரி வழங்குபவரான குருபகவான் ஆண்டுதோறும் ஒவ்வொரு ராசிக்கும் பெயர்ச்சியாவார். இந்த ஆண்டு மே 26 செவ்வாய் அன்று காலை 11:08 மணிக்கு மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இதை முன்னிட்டு மே இன்று 24 காலை 10:30 மணிக்கு முதல் கால லட்சார்ச்சனை துவங்கியது .மாலை 4:00 மணிக்கு 2ம் கால லட்சார்ச்சனை, மே 25 காலை 9:30 மணிக்கு 3ம் கால லட்சார்ச்சனை மாலை 4:00 மணிக்கு 4ம் கால லட்சார்ச்சனை நடக்கிறது. மே 26 காலை 7:35 மணிக்கு 5ம் கால லட்சார்ச்சனை தொடங்குகிறது. 9:00 மணிக்கு லட்சார்ச்சனை நிறைவு, புண்ணியாக வாசனம், சாத்துமுறை கோஷ்டி, காலை 10:00 மணிக்கு கட்டணசீட்டு பெற்ற ராசிக்காரர்கள், பரிஹாரராசி முன்பதிவு செய்த நபர்களுக்கு அர்ச்சனை நடக்கிறது. காலை 10:30 மணிக்கு யாகசாலை ஆரம்பம், புண்ணியகாவாசனம்,மஹா சங்கல்பம்,யாகம் கடம்புறப்பாடு, திருமஞ்சனம், மஹாஆரத்தி நடக்கிறது. பரிகார ராசிகளான மேஷம், ரிஷபம், கடகம்,சிம்மம், துலாம்,தனுசு, கும்பத்தினர் நேரடியாக கோயிலில் ரூ. நூறு,இருநூறு செலுத்தி  கட்டண சீட்டுகளை பெற்றுக் கொள்ளலாம். மேலும் ரூ. ஆயிரத்து ஐந்நூறு செலுத்தி முன்பதிவு செய்யும் நபர்களுக்கு மே 27 முதல் ஜூலை 12 வரை ஒரு மண்டல காலத்திற்கு விரும்பிய நாளன்று காலை 8:00 மணி முதல் 9:00 மணி வரை குருபகவான் சன்னதி முன்பு அபிஷேகம், பரிஹார ஹோமம், அர்ச்சனை செய்து கொள்ளலாம். நிர்வாக அலுவலர் கார்த்திகை செல்வி, கோயில் பணியாளர்கள் ஏற்பாடுகளை செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !