உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அருணாசலேஸ்வரர் கோவிலில் 5மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

அருணாசலேஸ்வரர் கோவிலில் 5மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

திருவண்ணாமலை: கோடை கால விடுமுறையை என்பதால், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சுவாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில், ஐந்து மணி நேரமாக காத்திருந்து தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கோடை கால விடுமுறையால் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. ஐந்து மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விடுமுறையால், ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து, அருணாசலேஸ்வரர் கோவிலிற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர். நேற்றும், இன்றும் என, இரண்டு நாள் தொடர்ந்து விடுமுறை நாள் என்பதால், உள்ளூர் பக்தர்கள் அல்லாமல், பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். இதனால் கோவிலில் கூட்டம் அலைமோதியது. இதனால் மாட வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !