உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவிலில் அமைச்சர் ராஜீவ் தரிசனம்

உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவிலில் அமைச்சர் ராஜீவ் தரிசனம்

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே, உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவிலில் அமைச்சர் ராஜுவ், முதல்வர் ஜோசப் விஜய் பெயரில் அர்ச்சனை செய்து சுவாமி தரிசனம் செய்தார்.

திருவாடானை சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.,யும், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை துறை அமைச்சர் ராஜுவ், தொகுதிக்குட்பட்ட உப்பூர், மோர்ப்பண்ணை, புதுக்காடு, முள்ளிமுனை, காரங்காடு உள்ளிட்ட பகுதிகளில், வாக்காளர்களை சந்தித்து நன்றி தெரிவித்தார். மேலும் அப்பகுதிகளில் நிலவும் குடிநீர் பிரச்சனை உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை கேட்டறிந்தார். இந்த நிலையில், உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயிலில், முதல்வர் ஜோசப் விஜய் பெயரில், அர்ச்சனை செய்து, அமைச்சர் வழிபாடு செய்தார். தொடர்ந்து, திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைகளில், அடிப்படைத் தேவையை நிவர்த்தி செய்து, மருத்துவமனையை தரம் உயர்த்துவதற்கான பணிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !