உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாண்டுரங்க கிருஷ்ணர் கோயிலில் லட்சார்ச்சனை விழா

பாண்டுரங்க கிருஷ்ணர் கோயிலில் லட்சார்ச்சனை விழா

ராமநாதபுரம்: ராமநாதபுரம் பாண்டுரங்க கிருஷ்ணர் கோயிலில் 3 நாள் நடந்த விஷ்ணு சகஸ்ரநாம லட்சார்ச்சனை விழா நேற்று நிறைவடைந்தது. உலக நன்மை, ஆரோக்கியம் வேண்டி ராமநாதபுரம் வடக்கு ரத வீதி ருக்மணி பாண்டுரங்க கிருஷ்ணர் கோயிலில் விஷ்ணு சகஸ்ரநாம லட்சார்ச்சனை ஜன., 1ல் லட்சார்ச்சனை துவங்கியது. நேற்று (ஜன., 3) காலை 8 மணிக்கு ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாம ஹோமம், திருமஞ்சனம், லட்சார்ச்சனை, அர்ச்சனை, பகல் 11.30 மணிக்கு தீபாராதனை, சாற்றுமுறை, சம்பாவணை நடந்தன. மாலை 6.30 மணிக்கு ஹனுமனுக்கு வடமாலை சாத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !