பிரான்மலை ஷேக்அப்துல்லா அவுலியா தர்கா சந்தனக்கூடுவிழா
ADDED :3791 days ago
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே பிரான்மலை ஷேக்அப்துல்லா அவுலியா தர்கா சந்தனக்கூடுவிழா நடந்தது.செல்லியம்பட்டி ரோட்டில் உள்ள தர்கா தோப்பிலிருந்து சந்தனக்குட ஊர்வலம் முக்கிய வீதி வழியாக சென்றது.மக்கள் வீடுகள் முன்நின்று மல்லிகைப்பூ,சர்க்கரை வழங்கினர். ஊர்வலம் பாப்பாபட்டி மலை அடிவாரம் சென்றது.அங்கிருந்து ஜமாத்தார்,மலை மீதுள்ள ஷேக் அப்துல்லா அவுலியா தர்காவிற்கு சந்தனக்குடத்தை தலையில் சுமந்து சென்றனர்.அதிகாலை 4 மணிக்கு பாத்தியா ஓதியபிறகு அனைவருக்கும் சந்தனம் பூசப்பட்டது. பிரசாதமாக சர்க்கரை வழங்கப்பட்டது.விழாவில் பிரான்மலையில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்றனர்.மத நல்லிணக்க விழாவாக நடந்தது.