பண்ணாரி அம்மன் கோவிலில் பாவை விழா 6ம் தேதி நடக்கிறது
ADDED :3791 days ago
சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அடுத்துள்ளது பண்ணாரி மாரியம்மன் கோவில். இங்கு ஆண்டு தோறும் மார்கழி மாதம் பாவை விழா நடக்கும். நடப்பாண்டுக்கான பாவை விழா, வரும் ஆறாம் தேதி காலை, 9 மணிக்கு தொடங்குகிறது. இதில் சத்தியமங்கலத்தை சுற்றியுள்ள பள்ளி மாணவ, மாணவிகள் திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் ஒப்புவித்தல் மற்றும் கட்டுரை எழுதும் போட்டிகளில் கலந்து கொள்கின்றனர். இதில் வெற்றி பெறுவோருக்கு அன்று மாலையே பரிசளிப்பு விழா நடக்கிறது. இதை கோவில் ஆணை ஆணையர் மாரிமுத்து தெரிவித்துள்ளார்.