உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸத்குரு சேஷாத்ரி ஸ்வாமிகளின் ஆராதனை மஹோத்ஸவம் நிறைவு

ஸத்குரு சேஷாத்ரி ஸ்வாமிகளின் ஆராதனை மஹோத்ஸவம் நிறைவு

மொடக்குறிச்சி: ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகேயுள்ள ஊஞ்சலூரில், ஸத்குரு சேஷாத்ரி சுவாமிகளின், 87ம் ஆண்டு ஆராதனை மஹோத்ஸவம் நேற்று நிறைவு பெற்றது. ஆண்டுதோறும் சேஷாத்ரி சுவாமிக்கு ஆராதனை மஹோத்ஸவம் நடப்பது வழக்கம். நடப்பாண்டு ஆராதனை விழா, கடந்த மாதம், 29ம் தேதி காலை துவங்கியது. ராஜபூஜீத ஸத்குரு குழந்தையானந்த சுவாமிகள் துவங்கி வைத்தார். இடைபட்ட நாட்களில் தனுர்மாத பூஜை, வேதபாராயணம், லட்சார்ச்சனை, உஞ்சவிருத்தி, பூஜைகள் நடந்தன. நேற்று நிறைவு விழா நடந்தது. இதில் தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா, மஹாராஷ்டிரா மாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் கலந்து கொண்டனர். இதையொட்டி பள்ளி மாணவ, மாணவியருக்கு நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது. தொடர்ந்து இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !