காஞ்சிபுரத்தில் தேவாரம் முற்றோதல்
ADDED :3719 days ago
காஞ்சிபுரம் : சைவ சமய குரவர்கள் நால்வரில் ஒருவரான சுந்தரர் இயற்றிய தேவாரத்தை, முற்றோதும் நிகழ்ச்சி காஞ்சிபுரத்தில் நேற்று நடைபெற்றது. சைவ சமய குரவரில் ஒருவரான சுந்தரர் அவதரித்த திருநாவலுாரில், அவருக்கு கோவில் கட்டும் பணி நடந்து வருகிறது. இதற்காக நிதி திரட்டும் வகையில், காஞ்சிபுரத்தில் சுந்தரர் இயற்றிய தேவாரத்தை முற்றோதும் நிகழ்ச்சி, நேற்று நடைபெற்றது.காஞ்சி, திருவண்ணாமலை கிரிவலக்குழு சிவ தொண்டு நற்பணி மன்றம் இதற்கான ஏற்பாடு செய்திருந்தது. நேற்று காலை, 6:00 மணியளவில், இந்த நிகழ்ச்சி துவங்கி, மாலை வரை நடந்தது.சுந்தரரின் தேவார பாடலை, பவானி தியாகராஜன் பாடினார். இந்த நிகழ்ச்சியில், ஏராளமான சிவ பக்தர்கள் கலந்து கொண்டனர்.