லட்சுமி நாராயண கோவில் மண்டல அபிஷேகம்
ADDED :3714 days ago
கரூர்: கரூர் மாவட்டம், உப்பிடமங்கலத்தில் உள்ள லட்சுமி நாராயண பெருமாள் கும்பாபிஷேகம் நடந்தது. இதை தொடர்ந்து மண்டல பூஜைகள் நடந்து வருகிறது. இதில், நேற்று முன்தினம் சிறப்பு மண்டல அபிஷேகம் நடந்தது. இதில், நாராயண பெருமாளுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி, திருமஞ்சனம் உள்ளிட்ட பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர், பல்வேறு மலர்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.