தென்னம்பாளையம் மாகாளியம்மன் கோவில் பூச்சாட்டு பொங்கல் விழா
ADDED :1 days ago
திருப்பூர்: தென்னம்பாளையம் ஸ்ரீமாகாளியம்மன் கோவில், 14ம் ஆண்டு பூச்சாட்டு பொங்கல் விழா நேற்று துவங்கியது.
பொங்கல் விழா, 10ம் தேதி பொட்டுசாமி பொங்கல், கிராம சாந்தியுடன் துவங்கியது. பூச்சாட்டு, 12ம் தேதி நடந்தது. வரும் 16ம் தேதி கம்பம் நடுதல், 17 ம் தேதி கொடுமுடி சென்று தீர்த்தம் எடுத்து வருதல், 18ம் தேதி பிளாக் மாரியம்மன் கோவிலில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து, மாலையில் முத்தையன் கோவிலில் இருந்து சீர் எடுத்துவரும் நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன. வரும், 19ம் தேதி விநாயகர் பொங்கல், படைக்கலம், முளைப்பாரி, அம்மை அழைத்தல் நிகழ்ச்சியும், 20ம் தேதி அதிகாலை திருக்கல்யாண உற்சவம், மாவிளக்கு ஊர்வலம், பொங்கல் வைத்தல், 21ம் தேதி மஞ்சள் நீர் விழா நடைபெற உள்ளது.