உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு; காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு; காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

சாயல்குடி: சாயல்குடி அருகே மாரியூர் பூவேந்தியநாதர் கோயிலில் நேற்று மாலை 4.30 முதல் 6:00 மணி வரை பிரதோஷ வழிபாடு நடந்தது.


மூலவர் மற்றும் நந்தி பகவானுக்கு 16 வகையான அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. பக்தர்கள் பஜனை பிரதோஷ பாடல்களை பாடி வழிபாடு செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகம் மற்றும் பவளம் மகளிர் குழுவினர் செய்திருந்தனர். உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு பிரதோஷ நந்திக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. கையிலாய வாத்தியம் இசைக்கப்பட்டது. ரிஷப வாகனத்தில் பிரகார புறப்பாடு நடந்தது. ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் உள்ள சங்கரன், சங்கரி, நந்தி பகவானுக்கு பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. பூஜைகளை தலைமை குருசாமி மோகன் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !