மாமல்லபுரம் ஆதிவராக பெருமாள் கோவிலில் வராக ஜெயந்தி உத்சவம்
ADDED :1 days ago
மாமல்லபுரம்: மாமல்லபுரம் ஆதிவராக பெருமாள் கோவிலில், ஜெயந்தி உத்சவம் நேற்று கோலாகலமாக நடந்தது.
வராக ஜெயந்தி நாளான நேற்று, மாமல்லபுரம், தொல்லியல் துறை நினைவுச்சின்ன வளாகத்தில் உள்ள, ஆதிவராக பெருமாள் கோவிலில், உத்சவம் நடந்தது. காலை, ஆதிவராக பெருமாள், நித்யபூஜை, திருப்பாவை சேவையைத் தொடர்ந்து, தொட்டியில் தேவியருடன் புறப்பட்டு, ஸ்தலசயன பெருமாள் கோவிலுக்கு சென்றார். வழிபாட்டிற்கு பின், பூதத்தாழ்வாருக்கு மரியாதை அளித்து, பல்லக்கில் வீதியுலா சென்று, பின்னர் அவரது கோவிலை அடைந்து, நண்பகலில் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. மாலை தேவியருடன் ஊஞ்சல் சேவையாற்றி, வீதியுலா சென்றார். திரளான பக்தர்கள் தரிசித்து வழிபட்டனர்.