உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதி ஸ்ரீனிவாசர்கள்!

திருப்பதி ஸ்ரீனிவாசர்கள்!

திருமலை திருப்பதியில் ஸ்ரீவேங்கடாசலபதியை மட்டும் தரிசித்து வரும் அன்பர்கள் இவர்களையும் தெரிந்து கொள்ளுங்கள். போக ஸ்ரீனிவாசர் இவர் வேங்கடாசலபதி காலடியில் இருக்கிறார். தினம் இவருக்கே அபிஷேகம் ஏகாந்த சேவையில் இரவில் பள்ளியறையில் வைத்துத் தாலாட்டுப் பாடுவதும் இவருக்கே.

உத்ஸவ ஸ்ரீனிவாசர்: இவருக்குத்தான் கல்யாண உத்ஸவம். ஊஞ்சல் உத்ஸவம், பிரம்மோத்ஸவம்.
கொலுவ ஸ்ரீனிவாசர்: இவரிடம் பங்காரு வாசலின் (தங்கவாயில்) முன் தினமும் பஞ்சாங்கம் படிப்பார்கள்.
உக்கிரக ஸ்ரீனிவாசர்: இவர் கார்த்திகை மாதம் கவுசிக ஏகாதசியன்று உஷத்காலத்தில் புறப்பட்டு சூரிய உதயத்திற்குள் கோயிலுக்கு வந்து விடுவார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !