உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெருமாளுக்கு திருஷ்டி!

பெருமாளுக்கு திருஷ்டி!

ஸ்ரீரங்கம் பெருமாளுக்கு தினமும் திருஷ்டி கழிக்கப்படுகிறது. ரங்கனின் அழகைக் கண்டால் யார்தான் திருஷ்டி போட மாட்டார்கள்? இறைவனை திருஷ்டியெல்லாம் அண்டாது என்றாலும் கூட, அன்பின் காரணமாக இச்சடங்கு செய்யப்படுகிறது. ஐந்தாவது பிரகாரத்திலுள்ள நாலுகால் மண்டபத்தில் இச்சடங்கு நடத்தப்படும். ஒரு சிறிய குடத்தின் மேல் திண்ணம் ஒன்றை வைத்து அதில் கனமான திரியிட்டுத் தீபமேற்றிப் பெருமாளுக்குக் காட்டுவர். இந்தச் சடங்கிற்கு திருவந்திக் காப்பு எனப்பெயர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !