திருவேங்கிடபுரம் பொன்னியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா
ADDED :5215 days ago
பொன்னேரி : பொன்னேரி அருகிலுள்ள, திருவேங்கிடபுரம் பொன்னியம்மன் கோவிலில், 34ம் ஆண்டு ஆடித்திருவிழா நடந்தது. 5ம்தேதி துவங்கிய திருவிழா, 7ம் தேதி வரை நடந்தது. அம்மனுக்கு கூழ்வார்த்தல், பொங்கல் வைத்தல் ஆகியவை நடந்தது. திருவிழாவின் போது உற்சவர் பொன்னியம்மன் அலங்கரிக்கப்பட்டு, வாணவேடிக்கைகளுடன், திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழா ஏற்பாடுகளை, திருவேங்கிடபுரம் கிராம பொதுமக்கள் செய்தனர். விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு உற்சவரை தரிசித்துச் சென்றனர்.