கன்னி வாழை வெட்டு!
ADDED :3961 days ago
பண்டாசுரனுடன் போர் செய்து அம்பாளால் அவனை அழிக்க முடியவில்லை. எனவே சிவபெருமானை வழிபட்டு விஜயதசமியில் பேர் செய்யும் போது அவன் வன்னி மரத்தில் ஒளிந்தான். தேவி வன்னிமரத்தை சங்கரித்து அசுரனை வதம் செய்தாள். இதுவே நாளடைவில் கன்னி வாழை வெட்டு என்று மருவி வழங்கலாயிற்று. அசுரனைச் சங்கரித்த நேரம் மாலை வேளை. எனவே விஜயதசமியில் இதனை ஞாபகப்படுத்தும் விதமாக கோயில்களில் வாழை வெட்டுவது வழக்கம். அம்பிகை போரிட்டு வெற்றி பெற்ற நாளாதலால் நாம் தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும்.