உள்ளூர் செய்திகள்

8 கை சரஸ்வதி!

பொதுவாக நான்கு கரங்களுடன் காட்சி தரும் சரஸ்வதி, எட்டுக் கைகளுடன் சில தலங்களில் காட்சி தருகிறாள். மணி, சூலம், கலப்பை, சங்கு, சக்கரம், வில், அம்பு, உலக்கை, ஆகியவற்றை கைகளில் தாங்கி சற்று உக்கிர வடிவத்தில் எழுந்தருளிய இத்தேவி சம்பாசுரனை வதைத்தாள் என்று தேவி மகாத்மியம் கூறுகிறது. எட்டுக் கைகள் கொண்ட சரஸ்வதியை சியாமளா என்று போற்றுவர். எட்டுக் கரங்கள் கொண்ட சரஸ்வதியை காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலிலும் கச்சபேஸ்வரர் கோயிலிலும் காணலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !