3 தலை துர்க்கை!
ADDED :3961 days ago
கும்பகோணம் அருகே உள்ள தாராசுரத்தில் ஐராவதேஸ்வரர் கோயிலில் ராஜ கம்பீரான் மண்டபம் அமைந்துள்ளது. இங்கு மூன்று தலைகளும் எட்டுக்கரங்களும் கொண்டு அழகாகக் காட்சி தருகிறாள். துர்க்கை, வலப்பக்க நான்கு கரங்களில் ருத்ராட்ச மாலை, கத்தி, கட்வாங்கம், தாமரையும், இடது கரங்களில் பாசம், அபயம், தண்டம், கபாலமும், ஏந்தியுள்ளாள். வலப்பக்கம் ஆண் உருவமும், இடப்பக்கம் பெண் உருவமாகவும் காட்சி தரும் இந்த துர்க்கையை அர்த்தநாரீஸ்வரர் திருவுருவம் என்கின்றனர். மேலும் மூன்று தலைகள் உள்ளதால் லட்சுமி, சரஸ்வதி, மகேஸ்வரி என்ற முப்பெருந்தேவியர் இணைந்த அபூர்வ திருக்கோலம் எனவும் போற்றி வணங்குகின்றனர்.