உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவன் கோவில்களில் சனி பிரதோஷ விழா

சிவன் கோவில்களில் சனி பிரதோஷ விழா

ப.வேலூர்: ப.வேலூர் சுற்றுப்பகுதியில் உள்ள சிவன் கோவில்களில், ஆண்டின் முதல் சனி பிரதோஷ விழா, இன்று நடக்கிறது. ப. வேலூர், ஸ்ரீ மீனாட்சி சுந்தரரேஸ்வரர் கோவிலில் அமைந்துள்ள நந்திக்கு, 50 லிட்டர் பாலாபிஷேகமும், மீனாட்சி சுந்தரரேஸ்வருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், விசேஷ பூஜைகளும் நடக்க உள்ளது. மேலும், பொத்தனூர் அருணாச்சலேஸ்வரர், வேலூர் அங்காளம்மன், நன்செய்இடையார் திருவல்லிங்கேஸ்வரர், கோப்பணம்பாளையம் ஸ்ரீ அழகு நாச்சியம்மன் கோவில்களிலும், பிரதோஷ விழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடு நடக்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !