பண்ணாரி கோவிலில் பாவை விழா
ADDED :3620 days ago
சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அடுத்துள்ளது பண்ணாரி மாரியம்மன் கோவில். இங்கு மார்கழி மாதத்தை முன்னிட்டு பாவை விழா நடந்தது. சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் ஆன்மிகம் சம்பந்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பண்ணாரி மாரியம்மன் கோவில் துணை ஆணையர் மாரிமுத்து பரிசு வழங்கினார்.