தேவிபட்டினம் நவபாஷாணம் கோவிலில் 500 டன் கழிவுகள் அகற்றம்!
ADDED :3619 days ago
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினம் நவபாஷாணம் கோவிலை சுற்றிலும் கடலில் தேங்கிய, 500 டன் கழிவுகளை அறநிலைய த்துறை அகற்றியது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் நவகிரகங்களை வழிபட்டு முன்னோருக்கு தர்ப்பணம், திருமண தடை நீங்க பரிகார பூஜைகள் செய்யப்படுகின்றன. இதற்காக தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாட்டு பக்தர்கள் அதிகளவில் வருகின்றனர். நவபாஷாணம் கோவிலை சுற்றிலும் கடலில் தேங்கிய துணிகள், குப்பை என, கிட்டத்தட்ட, 500 டன் கழிவுகள் டிராக்டர்கள் மூலம் அப்புறப்படுத்தப்பட்டன. தற்போது நவபாஷாண பகுதியில் துணிகள், நவதானியம், தேங்காய் போன்ற பூஜை பொருட்களை கடலில் போடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அவற்றை கொட்டு வதற்கு தனியாக, நான்கு தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் கோவிலை சுற்றியுள்ள கடல் பகுதி துாய்மையாக உள்ளது.