உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடுமலை கோவில்களில் அனுமன் ஜெயந்தி விழா

உடுமலை கோவில்களில் அனுமன் ஜெயந்தி விழா

உடுமலை: உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளிலுள்ள கோவில்களில், நாளை அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, உடுமலை வக்கீல் நாகராஜன் வீதியில் உள்ள, சீனிவாச ஆஞ்சநேய பெருமாள் கோவிலில், நாளை காலை, 9:00 மணிக்கு, சங்கல்பம் நடக்கிறது. 10:00 மணிக்கு, ஆவாஹன பூஜையும், 10:30 மணிக்கு, ேஹாமமும், 11:00 மணிக்கு, அபிேஷகமும், நடக்கிறது. மதியம், 12:00 மணிக்கு, சுவாமிக்கு அலங்கார பூஜை, தீபாராதனை நடக்கிறது; 12:30 மணிக்கு, கோவில் வளாகத்தில் உள்ள, பெருமாளுக்கும், ஆஞ்நேயருக்கும் நெய் அபிேஷக பூஜை நடக்கிறது. உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் உள்ள, ஆஞ்சநேயர் சன்னதியில், நாளை காலை, 9:00 மணிக்கு, சிறப்பு அபிேஷகம், அலங்காரமும், 10:00 மணிக்கு, ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. நெல்லுக்கடை வீதி, சவுந்திரராஜபெருமாள் கோவிலில் உள்ள, ஆஞ்சநேயர் சன்னதியில், காலை, 9:30 மணி முதல், சுவாமிக்கு, அபிேஷகம், ேஹாமமும், 1,008 வடை மாலை சாற்றப்பட்டு, சிறப்பு பூஜையும் நடக்கிறது. எலையமுத்துார் ரோடு, புவன கணபதி கோவிலிலுள்ள ஆஞ்சநேயருக்கு, நாளை காலை முதல் மதியம் வரை, சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. ஜல்லிபட்டி, கரட்டுப்பெருமாள் கோவிலில், நாளை காலை, 9:00 மணிக்கு, சிறப்பு அலங்காரமும், 10:00 மணிக்கு, வடை மாலை சாற்றி சிறப்பு பூஜை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !