உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலையில் டெலி மெடிசின் வசதி

சபரிமலையில் டெலி மெடிசின் வசதி

புதுடில்லி: பக்தர்கள் அதிக அளவில் வரும் கேரள மாநிலம், சபரிமலையில், டெலி மெடிசின் வசதியை ஏற்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவின் செயற்கைக்கோள்கள் மூலம் குறிப்பிட்ட கோவில் நகரங்களில் டெலி மெடிசின் வசதியை ஏற்படுத்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதனால், கோவில்களுக்கு அருகேயுள்ள நகரத்தில் அமைந்திருக்கும், மிகப்பெரிய மருத்துவமனையின் மருத்துவர்கள், நேரில் பார்க்காமலேயே கம்ப்யூட்டர் திரை மூலம் நோயாளியை பரிசோதித்து மருத்துவ சிகிச்சைக்கு பரிந்துரைப்பர். முதன் முதலில் இந்த வசதி, கேரள மாநிலம் சபரிமலையில் துவங்கப்படுகிறது. இதற்காக, பம்பையில் உள்ள மையம், புதுச்சேரி ஜிப்மர் மற்றும் கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையுடன் இணைக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட சோதனைகளுக்குப் பின், விரைவில் இம்மையம் செயல்பட துவங்கும் என, மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. சபரிமலையைத் தொடர்ந்து, கங்கோத்ரி, யமுனோத்ரி, கேதார்நாத், பத்ரிநாத், அமர்நாத் போன்ற இடங்களிலும், இதுபோன்ற வசதி செய்யப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !