உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரகூத்தமர் பிருந்தாவனத்தில் 443வது ஆராதனை விழா!

ரகூத்தமர் பிருந்தாவனத்தில் 443வது ஆராதனை விழா!

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார், மணம்பூண்டி, ரகூத்தமர் மூல பிருந்தாவனத்தில், 443வது ஆராதனை விழா, வரும் 19ம் தேதி துவங்குகிறது.  உத்திராதி மடத்தின் குருவான ரகூத்தம தீர்த்த சுவாமிகளின் 443வது ஆண்டு ஆராதனை விழா, வரும் 19ம் தேதி துவங்குகிறது. விழாவின் முதல்நாள்  நிகழ்ச்சியாக, அதிகாலை 5:00 மணிக்கு, மூலபிருந்தாவனத்திற்கு நிர்மால்ய அபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து, 7:00 மணிக்கு, பாராயணம், மாலை  6:00 மணிக்கு, ரதோத்சவம், பண்டிட்களின் உபன்யாசம் நடக்கிறது. இரண்டாம் நாளான 20ம் தேதியன்று, ஏகாதசி விரதம் முடிந்து, 21ம் தேதி  துவாதசி, 22ம் தேதி திரயோதசி விழா நிகழ்ச்சிகள் நடக்கிறது. நான்கு நாட்கள் நடக்கும் இவ்விழாவில், கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட  நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பங்கேற்க உள்ளனர். விழா ஏற்பாடுகளை, உத்திராதி மடத்தின் உத்தரவின்படி, பிருந்தாவனத்தின்  செயலாளர் ஆனந்த தீர்த்தாசார்ய சிம்மலகி செய்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !