சிவன் கோவில்களில் இன்று ராகு–கேது பெயர்ச்சி விழா
ADDED :3558 days ago
புதுச்சேரி: புதுச்சேரி கோவில்களில் இன்று ராகு – கேது பெயர்ச்சி விழா நடக்கிறது. இன்று மதியம் 12.36 மணிக்கு ராகு பகவான் கன்னி ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இதனையொட்டி, சிவன் கோவில்களில் ராகு – கேது பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடக்கிறது. புதுச்சேரி வேதபுரீஸ்வரர் கோவில், வில்லியனுார் திருக்காமீசுவரர் கோவில், பாகூர் மூலநாதர் கோவில், மொரட்டாண்டி நவக்கிரக கோவில், இடையார்பாளையம், நாணமேடு பைரவர் கோவில், ரயில் நிலையம் அருகே உள்ள கவுசிக பாலசுப்பிரமணியர் கோவில், கதிர்காமம் முருகன் கோவில், லாஸ்பேட்டை சுப்ரமணியசாமி கோவில் உள்ளிட்ட கோவில்களில் உள்ள நவக்கிரக சன்னதியில் ராகு – கேது பெயர்ச்சி விழா நடக்கிறது.