கோதண்டராமர் கோவிலில் நாளை அனுமன் ஜெயந்தி விழா
ADDED :3558 days ago
பாகூர்: பாகூர் கோதண்டராமர் கோவிலில், நாளை 9ம் தேதி அனுமன் ஜெயந்தி விழா நடக்கிறது. பாகூர் அக்ரஹார வீதியில் சீதா தேவி சமேத கோதண்டராமர் கோவில் உள்ளது. இங்கு, ஆஞ்சநேயருக்கு தனி சன்னிதி உள்ளது. அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, நாளை சிறப்பு திரு மஞ்சனம் நடக்கிறது. காலை 7.00 மணிக்கு, பால், தயிர், தேன், சந்தனம், வெண்ணெய் உள்ளிட்டவற்றால், சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் செய் து, மகா தீபாராதனை நடக்கிறது.