உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொள்ளாச்சி கோவில்களில் ராகு, கேது பெயர்ச்சி சிறப்பு பூஜை!

பொள்ளாச்சி கோவில்களில் ராகு, கேது பெயர்ச்சி சிறப்பு பூஜை!

பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில், ராகு, கேது பெயர்ச்சியையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது.  பொள்ளாச்சி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், ராகு, கேது பெயர்ச்சியையொட்டி, நவக்கிரகங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. காலை 11:00 மணிக்கு கலச பூஜை, அபிேஷகம், ஆராதனை உள்ளிட்ட பூஜைகள் நடந்தது. மதியம் 12:30 மணிக்கும் ராகு, கேது பெயர்ச்சியையொட்டி சிறப்பு அர்ச்சனை உள்ளிட்ட பூஜைகளும் நடைபெற்றது. நவக்கிரகங்களுக்கு வெள்ளி கவசம் சாற்றும் நிகழ்ச்சியும் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இதுபோன்று, பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், ராகு, கேது பெயர்ச்சியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !