கீழப்பெரும்பள்ளத்தில் கேது பெயர்ச்சி விழா: பக்தர்கள் தரிசனம்!
கீழப்பெரும்பள்ளத்தில் கேது பெயர்ச்சி விழா-: பக்தர்கள் தரிசனம்!
மயிலாடுதுறை: நாகை மாவட்டம், சீர்காழியை அடுத்த கேது தோஷ பரிகாரத் தலமாக விளங்கும் கீழப்பெரும்பள்ளத்தில் கேது பெயர்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் சௌந்தரநாயகி சமேத நாகநாதர் சுவாமி கோயில் அமைந்துள்ளது. இங்கு நவகிரகங்களில் முதன்மையானவர், சாயாகிரகம், ஞானகாரகன் என்று அழைக்கப்படுபவரான கேது பகவான் தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இத்தலத்தில் கேது தோஷம் உள்ளவர்கள் கொள்ளு தானியத்தை தரையில் பரப்பி தீபம் ஏற்றினால் தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த இத் தலத்தில் 8ம் தேதி வௌளிக்கிழமை இன்று மதியம் கேது பெயர்ச்சி விழா நடைபெற்றது. கேது பெயர்ச்சியை முன்னிட்டு காலை விக்னேஸ்வர பூஜை, ஸ்ரீ மகா கணபதி, நவகிரஹ ஹேமம் மற்றும் கேது பரிஹார யாக வேள்வி செய்யப்பட்டு பூர்னாஹூதி, மகா தீபாராதனை நடைபெற்றது. கடம் புறப்பாடு செய்யப்பட்டு கேது பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து கேது பகவான் சரியாக 12:37 மணிக்கு மீன ராசியில் இருந்து ஒன்னறை ஆண்டுகளுக்கு பிறகு கும்ப ராசிக்கு பிரவேசித்தார். அப்போது கேது பகவானுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை மணிபட்டு, கார்த்திகேயன், கல்யாணசுந்தரம் குருக்கள்கள் நடத்தி வைத்தனர். இதில் தமிழகம் மட்டுமல்லாது பிற மாநிலங்களில் இருந்து வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து 45 நாட்களுக்கு பரிகாரம் செய்ய வேண்டியவர்கள் வழிபாடு செய்பவர்களுக்கு பெயர்ச்சி பலன் கிடைக்கும் என கூறப்படுகிறது.
கேது பகவான் மீனராசியில் இருந்து கும்பராசிக்கு பெயர்ச்சியாகிறார் எனவே மிதுனம், கடகம், துலாம், விருச்சிகம், மகரம், கும்ப ராசிக்கார்கள் பரிகாரம் செய்து கொள்ளவது உத்தமம்.