உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருநாகேஸ்வரத்தில் ராகு பெயர்ச்சி விழா கோலாகலம்!

திருநாகேஸ்வரத்தில் ராகு பெயர்ச்சி விழா கோலாகலம்!

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே ராகு தோஷ பரிகாரத் தலமாக விளங்கும் திருநாகேஸ்வரத்தில் ராகு பெயர்ச்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது.

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அடுத்த திருநாகேஸ்வரத்தில் ராகுபகவான் சிவபெருமானை பூஜித்த திருத்தலமாக விளங்கும் கிரிகுஜாம்பிகை உடனாய நாகநாதசுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சுசீலமுனிவரின் குழுந்தையை அரவாகிய ராகு தீண்டியதால் ராகுவிற்கு சாபம் ஏற்பட்டது. இச்சாபம் நிவர்த்திபெற நான்கு தலங்கள் வழிப்பட்டு நிறைவில் திருநாகேஸ்வரத்தில் உள்ள நாகநாதசுவாமியை மகாசிவராத்திரி அன்று வழிப்பட்டு சாபம் நீங்கபெற்றார். ராகுவே என் அருள் பெற்ற நீ என்னை வழிப்பட்டு பிறகு உன்னை வணங்கும் அடியார்களுக்கு உன்னால் ஏற்படக்கூடிய காலசர்ப்பதோஷம், சர்ப்பதோஷம், புத்திரதோஷம் ஆகியவற்றை நீக்கி அருள்பாலிக்க வேண்டும் என சிவன் பணித்தார்.

இத்தகைய சிறப்பு பெற்ற இராகுஸ்தலத்தில், கன்னிராசியில் இருந்து சிம்மராசிக்கு ராகுபகவான் பகல் 12.36 மணிக்கு பெயர்ச்சியானதையொட்டி, திருநாகேஸ்வரம் ஸ்ரீ கிரிகுஜாம்பிகா சமேத ஸ்ரீ நாகநாதசுவாமி கோயிலில் கடந்த 04ம் தேதி திங்கட்கிழமை முதல் 06ம் தேதி புதன்கிழமை வரை முதல் கட்ட லட்சார்ச்சனை நடைபெற்று அன்று மாலை விக்னேஷ்வர பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது. தொடர்ந்து இன்று நான்காம் கால யாகசாலை பூஜை நிறைவாக மகா பூர்ணாஹதியும் தீபாராதனையும் மங்கள வாத்தியங்கள் முழங்க கடங்கள் புறப்பாடும் தொடர்ந்து இராகு பகவானுக்கும், நாகவள்ளி மற்றும் நாககன்னி ஆகியவற்றைக்கு மகா அபிஷேகங்கள் நடைபெற்றது.

தொடர்ந்நது பகல் 12.36 மணியளவில் மகா தீபாராதனையும் நடைபெற்றது. ராகு பெயர்ச்சியாவதை போலவே, அதே நேரத்தில் கேது பகவானும் மீனராசியில் இருந்து கும்பராசிக்கு பெயர்ச்சியாகிறார் எனவே இவ்விரு பெயர்ச்சிகளை யொட்டி மேஷம், ரிஷபம், கடகம், சிம்மம், கன்னி, விருச்சிகம், மகரம் மற்றும் கும்ப ராசிக்கார்கள் பரிகாரம் செய்து கொள்ளவது உத்தமம். இந்த ராகு பெயர்ச்சி விழாவில் தமிழகத்தில் இருந்து மட்டுமல்லாது பல வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்காண பக்தர்கள் வந்து தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !