உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராகு - கேது பெயர்ச்சி: திக்குமுக்காடியது திருநாகேஸ்வரம்!

ராகு - கேது பெயர்ச்சி: திக்குமுக்காடியது திருநாகேஸ்வரம்!

தஞ்சாவூர்: ராகு தோஷ பரிகாரத் தலமாக விளங்கும், திருநாகேஸ்வரத்தில் ராகு - கேது பெயர்ச்சி விழா நேற்று நடந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்ததால், நகரமே திக்குமுக்காடியது.தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அடுத்த திருநாகேஸ்வரத்தில், ராகு பகவான் சிவபெருமானை பூஜித்த திருத்தலமாக, கிரிகுஜாம்பிகை உடனாய நாகநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. சிம்ம ராசிக்கு... இக்கோவிலில், சுசீல முனிவரின் குழந்தையை, அரவமாகிய ராகு தீண்டியதால் ராகுவிற்கு சாபம் ஏற்பட்டது. இச்சாபம் நிவர்த்தி பெற, நான்கு தலங்களில் வழிபட்டு, நிறைவில் திருநாகேஸ்வரத்தில் உள்ள நாகநாத சுவாமியை மகாசிவராத்திரி அன்று வழிபட்டு, சாபம் நீங்கப்பெற்றார். இதனால், நவக்கிர தலங்களில் ஒன்றாக இத்தலம் விளங்குகிறது. இத்தகைய சிறப்பு பெற்ற ராகு தலத்தில், கன்னி ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு ராகு பகவான், நேற்று பகல், 12:36 மணிக்கு பெயர்ச்சியானதை யொட்டி யாகசாலை பூஜை நடந்தது. கும்ப ராசிக்கு...நிறைவாக மகா பூர்ணாஹூதியும், தீபாராதனையும், மங்கள வாத்தியங்கள் முழங்க கடங்கள் புறப்பாடும், தொடர்ந்து, ராகு பகவானுக்கும், நாகவள்ளி மற்றும் நாகக்கன்னி ஆகியவற்றுக்கும் மகா அபிஷேகங்கள் நடைபெற்றன. இதே நேரத்தில், கேது பகவானும் மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சியானதை யொட்டி, மேஷம், ரிஷபம், கடகம், சிம்மம், கன்னி, விருச்சிகம், மகரம், கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் பரிகாரம் செய்து கொள்ள பெருமளவில் குவிந்தனர். இதில், தமிழகம் மட்டுமல்லாது, வெளிநாடுகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இதனால், நகரமே திக்குமுக்காடியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !