உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் அக்காரவடிசில் வைபவம்!

பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் அக்காரவடிசில் வைபவம்!

பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் ஆண்டாள் நாச்சியார் பெருமாளுடன் சேர்க்கையான, அக்காரவடிசில் விழா நடந்தது. பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் மார்கழி 27ம் நாளான நேற்று ஆண்டாள் நாச்சியார், பெருமாளுடன் சேர்க்கையான கூடாரவல்லி தினம்கொண்டாடப்பட்டது. இதில் ராமானுஜர், பெருமாளிடம் 108 அண்டாவில் சர்க்கரை பொங்கல், 108 அண்டாவில் வெண்ணெய் படைப்பதாக வேண்டியிருந்தார். இதன் பொருட்டு பின்னாளில் ஆண்டாள் இதனை நிறைவேற்றியதாக கூறப்படுகிறது. இதனை நினைவு கூறும் வகையில் பெருமாள் கோயிலில், 216  வட்டிலில் பொங்கல், வெண்ணெய் படைக்கப்பட்டது. காலை 5.30 மணிக்கு ராமானுஜர் கோயிலில் உலா வந்தார். தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடந்து பிரசாதம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !