உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரம் கோயில் கும்பாபிஷேகம் யாக பூஜைகள் துவக்கம்

ராமேஸ்வரம் கோயில் கும்பாபிஷேகம் யாக பூஜைகள் துவக்கம்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி  (ஜன. 15) மாலை 5 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, தனபூஜை நடக்கிறது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஜன.,20ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையொட்டி கோயில் நந்தவனத்தில் அமைந்துள்ள பந்தலில் 108 யாக குண்டம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு நாளை மாலை 5 மணி முதல் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, தனபூஜை நடக்கிறது. 16ம் தேதி காலை 8.45 மணி முதல் கணபதி ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடக்கின்றன. அன்று ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன், பஞ்சமூர்த்திகளுக்கு பாலாலய பூஜை முடிந்ததும் 19ம் தேதிவரை நடை அடைக்கப்படும். நான்கு நாட்களும் பக்தர்கள் கோயிலுக்குள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை. 17ம் தேதி முதல் 20ம் தேதி காலை 8 மணிவரை தொடர்ந்து 8 கால யாக பூஜைகள் நடக்கிறது.

புதிய கலசம் நிர்மாணம்: 400 ஆண்டுகளாக மொட்டை கோபுரமாக காட்சியளித்த வடக்கு, தெற்கில் ரூ.3.71 கோடியில் இரு புதிய ராஜகோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் உச்சியில் 5 கலசங்கள் நிறுவப்பட உள்ளது. கோயில் வரலாற்றில் முதன் முதலாக 4 கோபுரத்திற்கும் கும்பாபிஷேகம் நடைபெறுவதுபக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !